இந்தியாவில் உச்சம் தொட்ட தங்க விலை

292
0
Spread the love

தமிழகத்தில் தங்கம் விலை பவுனுக்கு 680 ரூபா உயர்வடைந்து 76,960 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது.

அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50 வீத வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் விளைவாக நேற்றைய தினம் (29.08) ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை 76,280 ரூபாவுக்கு விற்பனையானது.

கடந்த 2 நாட்களில் மாத்திரம் 1,720 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் தங்கம் விலை 77,000 ரூபாவை அண்மித்துள்ளது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 03 ரூபா உயர்வடைந்து 134 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கிலோ கிராம் ஒன்றுக்கு 3,000 ரூபா உயர்வடைந்து 1,34,000 ரூபாவுக்கு வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here