எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளைய தினம் (12) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை மொத்தம் 26 நாட்கள் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 வரையான நாட்களில் நடைபெற்று, நவம்பர் 20ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியான குழுநிலை விவாதங்கள் இடம்பெற்று டிசம்பர் 14ஆம் திகதி மூன்றாவது மதிப்பீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது







