இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

26
0
Spread the love

தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தி இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த கையெறி குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தையும் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கையெறி குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் தெஹிவளை பொலிஸ் பிரிவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 11 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 வயதுடைய பிலியந்தலை மற்றும் கஹத்துடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here