யாழில் அதிகரித்து வரும் தற்கொலை மரணங்கள்

35
0
Spread the love

யாழில் ஒரே நாளில் 7 சடலங்களுக்கு உடற்கூற்றுப் பரிசோதனை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் ஏழு சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் தற்கொலை காரணமாக இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுகிய காலப்பகுதியில் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றமை யாழ். குடாநாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்கொலைத் தடுப்பு தொடர்பான சமூக மற்றும் உளவியல் ரீதியான விழிப்புணர்வின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவர்கள் அடங்கிய அணி நேற்று அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுசரணையுடன் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு விசேட தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here