மடுவில் ஆறு குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம்

55
0
Spread the love

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் மேற்கு மற்றும் கட்டையடம்பன் ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது.

இதனுடன், பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் தேக்கம் மற்றும் பெரியமுறிப்பு கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட நெல் உலர்த்தும் தளங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்படி, தலா 30 இலட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு நெல் உலர்த்தும் தளங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சரின் செயலாளர் ஏ.டி. ரைசுதீன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அமைப்பாளர் முகமட் சாஜித், தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட உயர் பீட உறுப்பினர்களான இராமையா ராதாகிருஷ்ணன், அன்ரன் கமிலஸ் உள்ளிட்ட பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here