கச்சா எண்ணெய் விலையில் சரிவு – மத்திய கிழக்கு விநியோகச் சவால்களால் நீடிக்கும் பதற்றம்!

66
0
Spread the love

சர்வதேச சந்தையில் ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதி மீதான தடைகளில் விலக்கு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்க அதிபரின் புதிய நிர்வாக உத்தரவுகள் காரணமாக கச்சா எண்ணெய் விலைகளில் சிறிதளவு சரிவு பதிவாகியுள்ளது.

இதற்கமைய, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 0.45 சதவீதம் வீழ்ச்சியடைந்து 109.06 டாலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் விலையும் 0.33 சதவீதம் வரை குறைந்துள்ளது. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் கடந்த மே மாதத்திற்குப் பின்னர் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எரிசக்தி இலக்குகள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருவது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் அராம்கோ தளம் மற்றும் ஷைபா எண்ணெய் வயல் உள்ளிட்டவை குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளின் எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் நீடிப்பதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்தும் 100 டாலருக்கு மேல் பலமாக நிலைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here