தலைமன்னார் கடலில் அத்துமீறி மீன்பிடித்த 7 இந்திய மீனவர்கள் கைது – படகுடன் கடற்படை அதிரடி!

71
0
Spread the love

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (01.11.2026) அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகக் கிடைத்த உளவுத் தகவல்கள் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையகத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை அடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 7 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படகும் மீனவர்களும் தலைமன்னார் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அவர்கள் மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here