பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் டொராண்டோவில் போதைப்பொருளை பெற்று அங்கிருந்து கட்டாரின் தோஹாவிற்கு சென்று பின்னர் குறித்த நபர்
விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதானவர் 27 வயதான கனேடியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.







