வவுனியா, செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் கல்வி அமைச்சினால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, குறித்த விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் அரங்கினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது.







