செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்கள் இருவரது என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்,
38ஆவது நாளாக இன்றைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நேற்றைய தினம் அமர்ந்ந நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் , 454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 440 என்பு கூடுகள் முழுமைய அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன







