நாட்டின் 05 மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும்

42
0
Spread the love

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இடிமின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், சில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலையும் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here