யாழ்ப்பாணத்தில் ஆசிரியையுடன் சிக்கிய கணவர் – மனைவியால் வெளியான அதிரடித் தாக்குதல்!

106
0
Spread the love

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஆசிரியையுடன் தனிமையில் இருந்த கணவனை கையும் களவுமாகப் பிடித்த அரசு ஊழியரான மனைவி, ஆத்திரத்தில் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் தொடர்புடைய ஆசிரியை படுகாயமடைந்து தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயதசமித் திருநாளான கடந்த அக்டோபர் 22 ஆம் திகதியன்று யாழ் நகர்ப் பகுதியில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலிகாமம் பிராந்தியத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியரும், அதே பகுதியில் ஆசிரியையாகப் பணியாற்றிவரும் விவாகரத்து பெற்ற இரு பிள்ளைகளின் தாயுமான ஒருவருமே இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விஜயதசமி தினமான அன்று நல்லூர் பகுதியில் உள்ள மற்றொரு ஆசிரியரின் வீட்டிற்குச் சென்ற தனது கணவரைத் தேடிச் சென்ற அரச ஊழியரான மனைவி, நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் கொண்டு உறவினர்களின் உதவியுடன் மதில் ஏறி உள்ளே குதித்துள்ளார். அங்குள்ள வெளி மலசல கூடத்தில் மறைந்திருந்த ஆசிரியை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த மனைவியும் அவரது உறவினர்களும் இணைந்து ஆசிரியையை நையப்புடைத்ததுடன் அவரது தலைமுடியையும் கத்தரித்துச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்குள்ள மோட்டார் சைிகில்களும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் காயமடைந்த ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தரப்பினர் எதிர்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here