இலங்கையை அண்மித்த பகுதியில் நிலவும் கீழ் வளிமண்டலக் கோளாறு தாழ்வுப் பகுதியாக வலுவடையக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (21) காலை வெளியிடப்பட்டுள்ள இந்த இயற்கை அனர்த்த எச்சரிக்கையானது நாளை (22) காலை வரை தொடர்ச்சியாக அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது. அடுத்த சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் அனைவரும் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







