யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை ஒத்திவைப்பு!

35
0
Spread the love

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேச ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்குத் தொடுக்கும் தரப்பு சாட்சியாளர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கமைய, வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் யோஷித ராஜபக்ச சம்பளமாக 5,150,626 ரூபாவைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here