சிறையிலிருக்கும் மதத் தலைவர்களின் ஆடை உரிமைகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை

59
0
Spread the love

நீதிமன்றம் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் போது காவி உடை அணிய அனுமதி

சிறைச்சாலையில் கைதிகளாக உள்ள பௌத்த துறவிகள், நீதிமன்ற விசாரணைக்கோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கோ சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் தங்களது துறவற ஆடையான காவி உடையை அணிந்து செல்ல அனுமதிக்கும் வகையில் சிறைச்சாலை நிலையான உத்தரவுகளைத் (Standing Orders) திருத்துமாறு நீதி அமைச்சர் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் தொடர்பான விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதி அமைச்சு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வழங்கியுள்ளது. கடந்த நாட்களில் மதத் தலைவர்கள் சிறை ஆடையில் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது தொடர்பாக எழுந்த பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here