மன்னாரில் மாடுகளை பார்க்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

265
0
Spread the love

மன்னாரில் தங்களுக்கு சொந்தமான மாடுகளைப் பார்க்க சென்ற மாணவன் ஒருவர் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கிடந்தகுளம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன்

மாடுகளைப் பார்ப்பதற்கென்று நேற்று முன் தினம்(09,12) பகல் 12.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவாகியும் குறித்த மாணவன் வீட்டிற்கு வராததைத் தொடர்ந்து மாணவனின் தந்தை கிராம மக்கள் உதவியுடன் அவரைத் தேடி உள்ளார் இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த மாணவன் கற்கிடந்தகுளம் கால்வாயில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவன் தவறுதலாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் கற்கிடந்தகுளம் பகுதியைச் சேர்ந்த  18 வயதான உயர்தரம் கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here