அரச அதிகாரிகளுக்கு விசேட விடுமுறை என்ன காரணம் தெரியுமா?

41
0
Spread the love

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் அனர்த்தங்கள் காரணமாக சேவைக்கு சமூகமளிமக்க முடியாமல் போன அரச அதிகாரிகளுக்கு விசேட விடுமுறைக்கான அனுமதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிரூபம் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சேவை இடங்களுக்கு சமூகமளிக்க முடியாமல் போன அதிகாரிகளுக்கு குறித்த விசேட விடுமுறை அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய விடுமுறை கோருபவர்கள் வேலைக்கு வரமுடியாமல் போன காரணத்தை குறிப்பிட்டு பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட கிராம சேவகர் கோரிக்கையுடன் கூடிய பரிந்துரையை நிறுவனத்தின் பிரதானியிடம் ஒப்படைக்க வேண்டும்.

குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் மாத்திரம் அவ்வாறு வேலைக்கு வர முடியாமன போன நாட்களுக்கென விசேட விடுமுறையை வழங்குமாறு சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here