விதை நெல் விவசாயிகளுக்குப் புதிய காப்புறுதித் திட்டம்

157
0
Spread the love

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அப்பண்ணைகளைக் காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

ஒரு ஏக்கர் விதை நெல் செய்கைக்காக 13,600 ரூபா காப்புறுதிப் பணத்தைச் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தும் பட்சத்தில், பயிர்ச் சேதம் ஏற்படும் போது ஒரு ஏக்கருக்கு 1,80,000 ரூபா நட்ட ஈட்டு தொகையை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியும்.

வெள்ளம், வறட்சி, கட்டுப்பாடற்ற நோய்கள், பீடை மற்றும் பூச்சித் தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இயற்கை அனர்த்தங்கள் மட்டுமன்றி, காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களையும் இந்தக் காப்புறுதித் திட்டம் உள்ளடக்குவதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here