பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரி திரட்டப்பட்ட கையெழுத்துகளின் எண்ணிக்கை 30,000 ஐ அண்மித்தது

29
0
Spread the love

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் அரசை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்களால் 29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.

கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு முழுவதும் சிவில் சமூக அமைப்புக்களால் நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்றைய தினம் (27.02) நிறைவுக்கு வந்தது.

அதனையடுத்து இன்றைய தினம் (28) திரட்டப்பட்ட அனைத்துக் கையெழுத்துக்களும் நீதியமைச்சுக்குத் தபாலிடப்பட்டுள்ளன. பிரதிசெய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களுக்கும், இந்தியா, அமெரிக்கா, சுவிஸ், சீனா உள்ளிட்ட தூதரகங்களிடம் நேரில் கையளிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மிகக் குறுகிய காலப்பகுதியில் குறிப்பிட்ட சில சிவில் அமைப்புகள் இணைந்து அரசு கொண்டுவர எத்தனிக்கும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெருமளவிலான கையெழுத்துகள் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here