200 கிலோ கிராம் போதைப்பொருள் இன்று அழிப்பு

63
0
Spread the love

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை அழிப்பதற்காக, கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலிருந்து வனாத்தவில்லு எரிபொருள் உலைக்கு  இன்று காலை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சுமார் 40 கிலோ கிராம் ஹெரோயின், 132 கிலோகிராம் கத்தின் , 55 கிராம் கொக்கைன் மற்றும் 3482 போதை மாத்திரைகள் இவ்வாறு அழிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன.

கொழும்பு மற்றும் பலபிட்டிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்கள் இன்றைய தினம் அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசிறி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here