மன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் வங்காலைப்பாடு கடற்பரப்பில் இன்று ( 15.04) புதன் அதிகாலை 4 மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் தற்செயலாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இரண்டும் படகுகளும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் காட்டாஸ்பத்திரியைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்துள்ள நிலையில்,
காயமடைந்த வங்காலைப்பாட்டு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், மீன்பிடி மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் விபத்துக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







