19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ஆம் திகதி ஆரம்பமானது.
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஓப்’ சுற்று முடிவில் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (31) நடைபெறவுள்ளது.
இதில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்தப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு கடந்த ஆண்டில் கிண்ணத்தை வென்றது.
அதேநேரம், குஜராத் அணி கடந்த 2022 ஆம் ஆண்டில் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







