டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை (30) மாலை நான்கு மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 10 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை மாலையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இரவு முழுவதும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், டெல்லி மாநகராட்சி, குடிமைப் பாதுகாப்பு மற்றும் கேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை ஈடுபட்டுள்ளன.







