யாழில் வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது

77
0
Spread the love

 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மூவர்
நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

உதயபுரம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சகோதரர்கள் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பான
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அரியாலை நாயன்மார்கட்டை சேர்ந்த 25,28,30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here