ட்ரம்பின் அறிவிப்பால் உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்தது

61
0
Spread the love

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து உலக சந்தையில் எரிபொருளின் விலை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.

இதற்கமைய ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.69 அமெரிக்க டொலர்கள் (3.76%) குறைந்து 68.79 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் 11 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான மிகக் குறைந்த விலை இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் முயற்சிப்பதாக எழுந்த அச்சத்தால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, நேற்றைய தினம் உலகளாவிய எரிபொருள் விலைகள் 03 வீதமாக உயர்ந்து, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 79 டொலரை எட்டியது.

இதேவேளை பௌதீக ரீதியில் எழும் பதற்றங்களால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள, தயாராக இருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உணரப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here