ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்குண்டு உயிரிழந்த சிறுவன்

76
0
Spread the love

 

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் ஐந்து வயது சிறுவன் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here