இலங்கைக்கு 30 வீத தீர்வை வரி – ட்ரம்ப் அறிவிப்பு

79
0
Spread the love

 

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத பரஸ்பர தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெள்ளை மாளிகையால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துவிதமான பொருட்களுக்கும் 30 வீத தீர்வை வரி அறிவிடப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதியால் இலங்கை மீது 44 வீத தீர்வை வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடுகளிடையே நிலவிய சமநிலையற்ற வர்த்தகத்தை சீர்ப்படுத்தும் நோக்கில் தீர்வை வரிகளை அறிவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

பின்னர் பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தமையால் அது 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

இந்த காலப்பகுதியில் அரசாங்கம் வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. எவ்வாறாயினும்
இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி வீதம் 14 வீதமே குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here