ஹட்டனில் பாதணி விற்பனை நிலையமொன்றில் தீ பரவல்

56
0
Spread the love

 

ஹட்டன் நகரில் வீதியோரம் காணப்பட்ட பாதணி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையம் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தீ பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here