இலங்கையில் தன்பாலின திருமணம் ஊக்குவிக்கப்படுவதாக மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

49
0
Spread the love

 

இலங்கையிலும் தன்பாலின திருமணத்தை ஊக்குவிப்பதற்கு சில அமைப்புகள் செயற்பட்டுவருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார்.

பேருவளை புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளைஞர்களில் பலர் திருமணம் தொடர்பில் எந்தவித புரிதலும் இல்லாமல் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள், உணர்வுகளுக்கு அடிமையாகி, தங்களது துணையை தேர்ந்தெடுப்பதாக தெரிவித்த அவர் ஆண் ஆணையும் , பெண் பெண்ணையும் திருமணம் செய்யும் கலாசாரம் வெளிநாடுகளில் மேலோங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இலங்கையிலும் இத்தகையை கலாசாரத்தை உட்புகுத்துவதற்கு சில அமைப்புகளும், நிறுவனங்களும் முனைப்புடன் செயற்பட்டுவருவதாக அவர் கூறினார்.

இதனை சிலர் மனித உரிமைகள் என்று கூறினாலும் தன்பாலின திருமணத்தை எந்த வகையிலும் மனித உரிமைகள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here