ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

175
0
Spread the love

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டம் உடன் அமுலுக்கு வந்துள்ளது

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலத்தின் 02ஆவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இது தொடர்பான விவாதம் இடம்பெறவிருந்த நிலையில்.
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரையான காலப்பகுதியில் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.

முன்னதாக ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்பின் எந்தவொரு உள்ளீடுகளுக்கும் முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here