மீண்டும் மோதுகிறது இந்தியா – பாகிஸ்தான்

129
0
Spread the love

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின், சுப்பர் 04 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியுடன் மோதுகிறது.

17ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, முதல் அணியாக சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், 10 ஆவது லீக் போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகள் மோதின.

இதில், 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம், வரும் ஞாயிற்றுக்கிழமை சுப்பர் 4 சுற்றில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோத உள்ளது.

மேலும், கடந்த லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியினருடன் இந்திய வீரர்கள் கை குலுக்காத சர்ச்சை, சுப்பர் 4 சுற்றிலும் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here