அண்மை காலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் அமெரிக்க கிரிக்கெட் சபையை ஐ.சி.சி இடைநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியமை மற்றும் முறையான நிர்வாக அமைப்பைச் செயற்படுத்தத் தவறியமையே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இருப்பினும் அடுத்த ஆண்டு பெ்ரவரி மாதம் இந்தியா, இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.







