இந்திய மீனவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

89
0
Spread the love

இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திய மீனவர்கள் நேற்று (05.10) இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்கொள்ளையர்கள் 02 படகுகளில் வருகை தந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்திய மீனவர்களின் உடைமைகளையும் அவர்கள் கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here