மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரத்த தான முகாம் இன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை இடம்பெற்றிருந்தது.
மன்னார் பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கமைவாக இரத்த தான முகாம் இடம்பெற்றது.
மன்னார் பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு காரணமாக பேசாலையில்
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சுமார் 100 பேரிடம் குருதி சேகரிக்கும் நோக்கில் குறித்த இரத்த தான முகாம் இடம்பெற்றது.
இந்த இரத்த தான முகாமில் பேசாலை மக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் குருதி வழங்கினர்.







