மக்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவித்தல்

143
0
Spread the love

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மன்னார் தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலையால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசுபட்டுள்ளது என்ற பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக மன்னார்,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (NWSDB) கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து
இந்த தகவல் முழுமையான வதந்தி என்பதை தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்புச் சபை மன்னார் மக்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பான குழாய் கிணறுகளில் இருந்தே பெறப்படுகிறது. இந்த நீர்மூலங்கள் மேற்பரப்பு வெள்ளதால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவிடல்லை.

எங்களின் ஆய்வகப் பிரிவு தொடர்ச்சியாக நீர்தரத்தை பரிசோதித்து மன்னார் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது மற்றும் குடிப்பதற்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.

ஆகையால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான எந்த அறிவிப்பும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எனத்தெரிவி க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here