நாட்டை உலுக்கிய பேரிடரினால் மன்னார் மாவட்டமும் பேரிழப்பை சந்தித்துள்ளது
உயிரிழப்புக்கள் உட்பட உடமைச்சேதங்கள்,கால்நடை விவசாய நிலங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் வெள்ள நீரினால்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 40000 இற்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
உறவுகளிற்கு கரம் கொடுப்பதற்காக “மீண்டெழும் மன்னார் ” எனும் தொனிப்பொருளில் எதிர்வருகின்ற 4,5,6 ம் திகதிகளில் மாவட்டம் தழுவிய ரீதியில் 9 இடங்களில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான
கற்றல் உபகரணங்கள் சேகரிக்க தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த “மீண்டெழும் மன்னார்” நடவடிக்கைக்கு இயன்ற வரையில் உதவுமாறு தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.








