அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மதுவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் இன்று (24.12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஆண்டு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 242 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை மதுவரித் திணைக்களம் எட்டி வருவதாக மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மதுவரித் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் பின்னர், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் தேவையற்ற காகித ஆவணங்களின்றி இலகுவாகத் தமது பணிகளை முன்னெடுக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்காமல் போன வருமானங்களை ஈட்டிக்கொள்வதற்கு இந்த டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் பாரிய உதவியாக அமையும் என்றும் மதுவரி ஆணையாளர் நாயகம் மேலும் விளக்கமளித்தார்.







