கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று( 31.12.) புதன்கிழமை, முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் கிராம உத்தியோகத்தர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ப.அஸீம் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தின் அனர்த்தம் தொடர்பான சுற்று நிருபத்துக்கு அமையவே நாங்கள் செயற்படுகிறோம்.
அவ்வாறு செயற்படும்போது மக்களால் தாக்கப்படுகிறோம். அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு மாறாக நாம் எவ்வாறு செயற்படுவது.
எமது உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றனர். கிராம உத்தியோகத்தரான
எஸ்.எச்.எம்.எம். சப்னாஸ்
தாக்குதலுக்கு உள்ளாகி சிலாபத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்கியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
இவ்வாறு எமது உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.







