இன்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

59
0
Spread the love

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 14 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இன்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 266 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றுள் 257, 258 என அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கழுத்தில் கட்டப்படும் தாயத்து போன்ற தகடு ஒன்றும் சான்றுப்பொருளாக இனங்காணப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here