லிட்ரோ விலையில் மாற்றமில்லை

80
0
Spread the love

ஜனவரி மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாதென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் காணப்படும் நிலைமைக்கமைய எரிவாயு விலையில் அதிகரிக்கும் சூழல் காணப்பட்ட போதிலும் நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த சந்தர்ப்பத்தில் விலை மறுசீரமைப்பை மேற்கொள்ளாதிருக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3690 ரூபாவிற்குகே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும்.

எவ்வாறெனினும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here