முந்தலம் பகுதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு

99
0
Spread the love

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12.01) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here