கண்டியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தையில் வீதியமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே அவர் இம்மண்மேட்டில் சிக்கியுள்ளார்.
சுமார் 20 அடி உயரமுள்ள மண்மேடு திடீரென அவர் மீது சரிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
43 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.






