அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர்.
நிக்கவெவ பிரதேசத்தில் இன்று (12.01) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கரவண்டி வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.
மேலும் இதன்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து குறித்து ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







