15 நாட்களில் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

94
0
Spread the love

2026 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கைக்கு 131,898 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 15 ஆம் திகதி அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த தினமாகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த 15 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 23,786 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 14,785 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,166 பேரும் மற்றும் ஜெர்மனியிலிருந்து 9,260 பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here