எதிர்வரும் 17/2/2026 ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப்பரீட்சை எழுத உள்ள மாணவர்களிற்கான தமிழ் மற்றும் கணித பாடத்திற்கான விசேட செயலமர்வு செயலமர்வுகள் சிகரம் நிறுவனத்தின் அனுசரணையுடன் செம்பியன்பற்றுத் தெற்கு வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது
இந்த செயலமர்வில் கணித பாட விரிவுரையாளராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மென்பொருளியலாளர் பட்டத்தை முடித்த வினித்தும் தமிழ்ப்பாட வளவாளராக சிகரம் கல்வி நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ் ஆசிரியருமான கு.உதயபாஸ்கரனும் கலந்து கொண்டார்கள்.
இந்த விசேட செயலமர்வில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் மற்றும் பரீட்சை இடம்பெறுவதற்கு முன் சிகரம் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணம் முழுவதும் பிரிசித்தி பெற்ற ஆசிரியர்களை கொண்டு பல விசேட செயலமர்வுகள் இடம்பெற உள்ளன.







