கலாபூஷணம் விருது பெற்ற எஸ்.ஏ. உதயனுக்கு மன்னாரில் பாராட்டு விழா

116
0
Spread the love

இலங்கை புத்த சாசன அமைச்சினால் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் இருந்து 200 கலைஞர் தெரிவு செய்யப்பட்டு கடந்த 12ம்திகதி
கொழும்பு அலரி மாளிகையில் ‘கலாபூசணம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .

குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பேசாலையைச் சேர்ந்த . எஸ். ஏ. உதயனை வாழ்த்தி

‘விழிகள் கலாமுற்றம்’ அமைப்பு பாராட்டு விழா ஒன்றினை முன்னெடுத்திருந்தது.  25.01 அன்று பேசாலை சீ- வியூ ஹோட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் பேசாலையின் மூத்த மரபுக்கலைஞர்கள் கலந்து கொண்டு பேசாலைக் கிராமத்திற்குரிய மங்கலப் பாடல்களைப்பாடி, விழாவின் நாயகனை சம்பிரதாயபூர்வமாக மன்னார் தலைமன்னார் பிரதான வீதி வழியாக அழைத்து வந்து விழாவை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

குறித்த பாராட்டு விழாவில் சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன் , மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள், மன்னாரைச் சேர்ந்த மூத்த கலாபூஷண விருது பெற்றவர்கள், பேசாலை சமூக மேம்பாட்டு அமைப்பினர் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here