மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி உதிரிபாக விற்பனை நிலையமொன்றில் பணிபுரிந்துவந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரால் ரீ 56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







