‘பசியில்லா தேசம் ‘ நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் பண்டிகை பொங்கல் விழா

197
0
Spread the love

பசியில்லா தேசம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (04.02.) காலை மாபெரும் பொங்கல் விழா மன்னார் நகர பகுதியில் நடைபெற்றது.

அனைவரும் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டிக்கொண்டு தை 15 இலிருந்து மாசி 15 வரை அனுஷ்டிக்கப்படும் தமிழ் தை மாதத்திலே இந்த பொங்கல் விழாவினை நடத்துவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.

குறித்த பொங்கல் விழாவிலேயே சிறுவர்கள் பட்டம் ஏற்றும் நிகழ்வு, மற்றும் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந்த பொங்கல் விழாவிலே பிரதம விருந்தினர்களாக மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் ரஞ்சன் மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here