மன்னாரில் அமைச்சர் பிமல் தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம்

179
0
Spread the love

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அவிவிருத்தி தொடர்பான விஷேட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றைய தினம் (10.02)செவ்வாய்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது .

மன்னார் அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில், போக்குவரத்து நெடுஞ்சாலை துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்
நடைபெற்ற இக்கூட்டத்தில்,

மன்னார் மாவட்டத்தின் வீதிகள் புணர்நிர்மாண வேலைகள், போக்குவரத்து, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடுகள் தொடர்பிலான விடயங்கள் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது அமைச்சர் பிமல் ரத்னநாயக்கா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

இன்று மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் குழுவின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்தக் கூட்டம் மன்னார் மாவட்ட அரச அதிபர் அவர்களின் தலைமையில் முக்கியமாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.

எதிர்வரும் காலத்தில் , இந்த போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் குறைந்தது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து கூடும் என நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம்.

இன்றைய தினம், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைத் தலைவர்கள், நகர சபைத் தலைவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
எமது அமைச்சரவை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன் மூலம், ஒரு அளவிற்கு தீர்வுகளைப் பெற முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம்.

இந்த அரசியல் தலைவர்களும் நிர்வாகத் தலைவர்களும் திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், என்றார்.

குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ம. ஜெகதீஸ்வரன், கே.காதர்மஸ்தான், து.ரவிகரன்,பா.சத்தியலிங்கம்,செ. திலகநாதன் வடமாகாண செயலாளர் தனுஜா முருகேசன், மற்றும் தேசியப் போக்குவரத்து சபை, மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டதோடு,

மன்னார் மாவட்ட அனைத்து பிரதேச செயலாளர்கள், அனைத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here