மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

101
0
Spread the love

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடலோரப் பகுதியில், நேற்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடலோர மாநிலத் தலைநகரான கோட்டா கினபாலுவுக்கு வடகிழக்கே 100 கிலோமீட்டருக்கும் (62 மைல்கள்) குறைவான தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இது கடலுக்கு அடியில் 619.8 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் அதிகாலை வேளையில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பாதிப்புகளோ ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என மதிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கம் மிகவும் ஆழமான பகுதியில் ஏற்பட்டதால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனக்கூறி அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எந்தவொரு எச்சரிக்கையையும் விடுக்கவில்லை.

மலேசிய வானிலை ஆய்வு மையம் இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.

சபாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலும், சரவாக் மாநிலத்தின் சில இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here